| ADDED : ஜூன் 11, 2024 06:13 AM
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு வரும் 13ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:202௪ - 2025ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான, அனைத்து பாடப் பிரிவுகளுக்கான முதற்கட்டகலந்தாய்வு, வரும் 13ம் தேதி துவங்கி 15 வரை நடக்கிறது.முதல் நாளன்று பி.எஸ்சி., கணினி அறிவியல், கணினிபயன்பாடு, இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கும், 14ம் தேதி, பி.எஸ்சி., கணிதம், விலங்கியல் மற்றும் பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,) பாடப்பிரிவுகளுக்கும், 15ம் தேதி, இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்குகலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் அசல் கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அனைத்து சான்றிதழின் மூன்று நகல்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.