உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு

கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு

கடலுார் : ஆலப்பாக்கத்தில் கார் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி மண்ணில் சிக்கியதால், கடலுார்- சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்து, மக்கள் அவதியடைந்தனர்.நாகலாந்தில் இருந்து சிதம்பரத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று கடலுார் வழியாக சென்றது. காலை 8:00 மணியளவில், ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சாலைப் பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்ணில் சிக்கியது.இதனால், கடலுார்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. இரு மார்க்கத்திலும் ஒரு கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சென்று, கண்டெய்னர் லாரியை, பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்து அகற்றி, போக்குவரத்து சரி செய்தனர். அதனையடுத்து, 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.போக்குவரத்து தடைபட்டதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைவரும் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !