உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு

விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு

விருத்தாசலம், விருத்தாசலத்தில் நாய் கடித்து இரண்டு வயது ஆண் மான் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை இரண்டு வயதுடைய ஆண் மான் இறந்து கிடந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறை அலுவலர் ரகுவரன் மற்றும் வனவர்கள்,இறந்த மானை மீட்டு, விருத்தாசலம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மான் நாய் கடித்து இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், மானின் உடல், கார்குடல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.இதுகுறித்து வனவிலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், விருத்தாசலம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன விலங்குகள் இறந்து கிடப்பது தொடர்ச்சியாக உள்ளது. கோடை காலம் என்பதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது, நாய்கள் கடித்து இறக்கின்றன.எனவே, வனவிலங்குகள் ஊருக்குள் தண்ணீர் தேடி வராத வகையில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி