உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்

பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் திரு.வி.க., நகராட்சி நடுநிலை பள்ளியில், விருத்தாசலம் ரோட்டரி சங்கம் மற்றும் சந்திரா மருத்துவமனை சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் தீபக்சந்த், செயலர் பரமசிவம், பொருளாளர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட்லாசர் வரவேற்றார்.சந்திரா மருத்துவமனை பல் மருத்துவர்கள் சவுமியா பிரசன்னா, காவ்வியா ஆனந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்தனர்.இதில், ஜாகிர் உசேன், பொறியாளர் சாமுவேல் கென்னடி, ஆடிட்டர் டேவிட் ராஜா, பிரவீன், லட்சுமி ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !