உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் தர்ணா

கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் தர்ணா

கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட ேஷர் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் சங்கம்சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார்.செயல் ஒருங்கிணைப்பாளர்திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், செல்வம், கஜேந்திரன், சையதுமுஸ்தபா முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்டத்தில் ேஷர் ஆட்டோக்களுக்குபிரத்யேக தனி வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.கடலுார் பஸ்நிலையத்திலேயே ேஷர் ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, கடலுார் மாவட்ட ேஷர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள்சங்க தலைவர் ராயர் ராஜாங்கம், செயல் தலைவர் வேல்முருகன், துணை செயலாளர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை