உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிப்காட் தொழிற்சாலையில் தர்ணா போராட்டம்

சிப்காட் தொழிற்சாலையில் தர்ணா போராட்டம்

கடலுார்: கடலுார் சிப்காட்டில், தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் சிப்காட் வளாகத்தில் பெயிண்ட் மூலக்கூறுகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நிர்வாகம் சார்பில் பணிபுரிந்து வந்த 5 ஊழியர்கள், அலுவலகத்தில் உள்ள சங்கத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் 5 ஊழியர்களை பணி மாற்றம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 பணியாளர்கள் கொடுத்த புகார் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தொழிலாளர்கள் திடீரென பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தனியார் தொழிற்சாலை சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் நேற்று தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தனர். இதையடுத்து, தற்காலிகமாக தர்ணா போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்