உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் உள்ள இந்து உதவி பெறும் நடுநிலை பள்ளியில், விருத்தாசலம் தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் கால மீட்பு, ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்வரசி தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர், சிறப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என மாணவர்களுக்கு போலி ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை