உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 

எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 

கடலுார் : நாகப்பட்டிணம் மாவட்டம், வேலிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்,30; திருச்சி, உறையூர் முகமது ஷாகித், 23; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.இவர்களை உடல் பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று முன்தினம் வேனில் அழைத்து வந்தார். பரிசோதனை முடிந்து வேனில் ஏறும் போது, இருவரும் ஓட்டலில் உணவு கேட்டு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்தனர். வேனின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், கைதிகள் இருவர் மீதும் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை