உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளி தேர்ச்சி பெற்றோர் அதிருப்தி

அரசு பள்ளி தேர்ச்சி பெற்றோர் அதிருப்தி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நுாற்றாண்டு விழா கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபத்தில் நுாற்றாண்டு விழா கண்ட இப்பள்ளிக்கு கலையரங்கம், அலங்கார முகப்பு வளைவு உள்ளிட்ட வசதிகளை முன்னாள் மாணவர் சங்கத்தினர் செய்து கொடுத்தனர்.பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், தேர்வெழுதிய 187 மாணவர்களில், 169 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, 90.37 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். 18 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும், மாணவர்கள் கல்வியில் ஈடுபாடு காட்டவில்லை. இதுபோல், அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 93 சதவீத தேர்ச்சியை மாணவிகள் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்தாலோசனை நடத்தி, வரும் கல்வியாண்டில் நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி