உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த சீமான் பேச்சுக்கு தெய்வீக பேரவை கண்டனம் தெய்வீக பேரவை நிறுவன தலைவர் பெருமிதம்

முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த சீமான் பேச்சுக்கு தெய்வீக பேரவை கண்டனம் தெய்வீக பேரவை நிறுவன தலைவர் பெருமிதம்

சிதம்பரம்: அறநிலையத்துறை நடத்தும், அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த சீமான் பேச்சுக்கு தெய்வீக பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா அறிக்கை:பழனியில், வரும் செப்டம்பர் 24, 25ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர்.முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? கனவில் வந்து மாநாடு நடத்துங்கள் என முருகன் உதித்தாரா? தாம் கையில் வேல் எடுத்ததால் தான், இந்த அரசு முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது என, அரசியல் சுயலாபத்திற்காக, நா.த.க., சீமான், அறநிலையதுறையை விமர்சித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது.தமிழகத்தில், 1982ல் காணாமல் போன திருச்செந்துார் கோவில் வேலை மீட்க கோரி கருணாநிதி நடைபயணம் சென்றுள்ளார். திருவாரூர் தேரைச் சீரமைத்துள்ளார். தி.மு.க., பொறுப்பேற்ற பின், 1922 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.இவை அனைத்தும் தெரிந்தும், தேர்தலை மையப்படுத்தி உலகத் தமிழ் முருகன் மாநாட்டை அரசியல் லாபத்திற்காக தி.மு.க., நடத்துவதாக தவறான கருத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுவது ஏற்புடையதல்ல. அரசை பாராட்ட மனம் இல்லை என்றாலும் குறை கூறாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ