உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகளிடம் வாக்குவாதம் பணிந்தனர் தி.மு.க.,வினர்

அதிகாரிகளிடம் வாக்குவாதம் பணிந்தனர் தி.மு.க.,வினர்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கட்சிக்கொடியை அகற்றக்கூறிய அதிகாரிகளிடம் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பத்தில் நேற்று கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரித்தார். இதற்காக தி.மு.க., கூட்டணி கட்சியினர் நகரம் முழுதும் ஒவ்வொரு தெரு முனையிலும் கட்சி கொடிகளை கட்டியிருந்தனர். இதை அறிந்த தேர்தல் அலுவலர் கிருஷ்ணராஜன் தலைமையில் அதிகாரிகள் கொடிகளை அகற்ற வந்தனர்.அப்போது அங்கு வந்த தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் மற்றும் தி.மு.க.,வினரிடம் 'தேர்தல் விதிப்படி கொடிகள் கட்டக் கூடாது. நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் அகற்றி அதற்கான செலவை வேட்பாளர் கணக்கில் எழுதுவோம்' என்றனர்.அதற்கு நகர செயலாளர், 'வேட்பாளர் ஓட்டு கேட்க வருவதால் கொடி கட்டியுள்ளோம். அவர் சென்றவுடன் நாங்களே அகற்றி விடுவோம்' என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தல் ஈடுபட்டார்.அதிகாரிகள் கொடிகளை அகற்றியே தீர வேண்டும் என உத்தரவிட்டதால் வேறு வழியின்றி தி.மு.க.,வினர் கட்சிக் கொடிகளை அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ