உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி சான்றிதழ் விவகாரம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரம்

போலி சான்றிதழ் விவகாரம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரம்

சிதம்பரம் : போலி சான்றிதழ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று அண்ணாமலை பல்கலையில் விசாரணை நடத்தினர்.சிதம்பரம் அடுத்த மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையில் உள்ள பாலத்தின் கீழ் கடந்த 19ம் தேதி கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்கள் கிடந்தன. இதுகுறித்து அண்ணாமலை பல்கலை பதிவாளர் (பொறுப்பு) பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து சிதம்பரம் மன்மதசாமி நகர் சங்கர்,37; மீதிகுடி நாகப்பன்,48; ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து கட்டு, கட்டாக போலி சான்றிதழ்கள், லேப்டாப் மற்றும் பிரிண்டர் பறிமுதல் செய்தனர். சங்கர் உள்ளிட்ட 6 பேரின் வங்கி கணக்குகளை முடக்கினர்.இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம், சான்றிதழ்கள் சிதறி கிடந்த இடத்தை பார்வையிட்டு, சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.அப்பகுதி ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். அண்ணாமலை பல்கலையில், புகார் அளித்த பிரபாகரிடம் சான்றிதழ்கள் குறித்தும், பல்கலையில் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர். நேற்று தேர்வுத் துறை அலுவலர்கள் சிலரிடம் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை