உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் சங்கத்தினர் சிதம்பரத்தில் ரயில் மறியல்

விவசாயிகள் சங்கத்தினர் சிதம்பரத்தில் ரயில் மறியல்

சிதம்பரம், : தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில், செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.பின், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பிரகாஷ், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மா.கம்யூ., முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, இந்திய கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், தமிமுன் அன்சாரி, மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, சித்ரா, வேல்வேந்தன், சையது இப்ராஹிம், மாதர் சங்கம் மல்லிகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ