உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் நிலையத்தில் பழுதடைந்த ஹைமாஸ் விளக்கு

பஸ் நிலையத்தில் பழுதடைந்த ஹைமாஸ் விளக்கு

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் பழுதடைந்த ஹைமாஸ் மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பஸ் நிலையத்தில், இருந்துமாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் உள்ள புறக்காவல் நிலையம் பகுதியில் ைஹமாஸ் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தடைந்தது. இதையடுத்து, மின் விளக்கை சீரமைக்காமல், தற்காலிகமாக புறக்காவல் நிலையம் மேற்கூரை பகுதியில் மின் விளக்குகள் அமைத்தனர். இதை தொடர்ந்து, ைஹமாஸ் மின் விளக்கு சீரமைக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, ைஹமாஸ் மின் விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ