உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை

தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை

குள்ளஞ்சாவடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்பு துறை சார்பில் ஆபத்து கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறை சார்பில், குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த ஒத்திகையில், குறிஞ்சிப்பாடி நிலைய அலுவலர் உத்திராபதி தலைமை தாங்கினார். நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா, சிறப்பு நிலைய அலுவலர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர்.பேரிடர் மற்றும், ஆபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பொதுமக்கள் மற்றும், மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை