உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது

போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது

வடலுார்: போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் வசித்தவர் அழகர்சாமி மகன் தவனேஸ்வரன்,43. இவர் அகதி முகாமில் இருந்து தனது பெயரை நீக்கம் செய்து, சிறுவயதிலேயே வெளியே வந்து, குறிஞ்சிப்பாடி சுப்ரமணியர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவர் இந்திய குடிமகனை போன்று குறிஞ்சிப்பாடி விலாசத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வாங்கி கடந்த 2018ம் ஆண்டு பயன்படுத்தி வந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் எல்லப்பன்பேட்டை வி.ஏ.ஓ., சித்ரா விசாரணை நடத்தினார். அதில், தவனேஸ்வரன் போலி ஆவணங்களை தயார் செய்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., சித்ரா அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் வீரசேகரன் வழக்கு பதிந்து, தவனேஸ்வரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை