உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி முதல்வர் பிறந்த நாள் விழா

மாஜி முதல்வர் பிறந்த நாள் விழா

கடலுார்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி கடலுார் முதுநகரில் கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி, கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சம்பத் ஏற்பாட்டின்படி, முதுநகர் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பகுதி செயலாளர் கந்தன் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மீனவரணி தங்கமணி, ஜெ., பேரவை இணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர். இதில் ஓட்டுனர் அணி சுந்தராஜன், மாணவரணி சிவா, நிர்வாகிகள் செந்தில்குமார், தனசிங்குமார், பழனி, சீனிவாசன், ஹரிஹரன், வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி