உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் கடலுார் 17வது தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்

மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் கடலுார் 17வது தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்

கடலுார்: மக்களின் அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது என, கடலுார் மாநகராட்சி 17வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கிரேசி கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அமைச்சர் பன்னீர்செல்வம் வழிகாட்டுதல்படி கடலுார் மாநகராட்சி 17 வது வார்டில் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வன்னியர்பாளையம் மெயின்ரோடு, சாம்பசிவம் நகர், காமராஜர் நகர், மேட்டுத் தெரு, வடிவேல் நகர், தனபாக்கியம் நகர், பீச்ரோடு உள்ளிட்ட இடங்களில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.வார்டில் 120 எல்.இ.டி., தெருமின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் மற்றும் காமராஜர் நகர் பூங்கா அருகில் ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு வார்டின் மையப் பகுதியில் புதிய கட்டடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வன்னியர்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்து, ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி காமராஜர் நகரில் முடியும் தருவாயில் உள்ளது. மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !