உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியர் புஷ்பராஜிக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ஜெயந்திகுரளரசன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் மணிவாசகன், வளமைய மேற்பார்வையாளர் (பொ) குணசேகரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா, ஊராட்சி துணைத் தலைவர் புகழேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார்.கடலுார் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பழனி, ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் புஷ்பராஜை பாராட்டி பேசினார்.ஆசிரியர்கள் இளஞ்செழியன், கீதா, கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் வள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை