உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி மாணவருக்கு கவர்னர் பரிசு வழங்கல்

நெய்வேலி மாணவருக்கு கவர்னர் பரிசு வழங்கல்

நெய்வேலி: மதுரை தியாகராசர் கல்லுாரியில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலர் தியாகராசன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் பாண்டிய ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில அளவிலான பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக கவர்னர் ரவி பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் கமலேஷ் என்பவர் மதுரை தியாகராசர் கல்லுாரியில் நடந்த திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக கவர்னர் ரவி 25 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி