| ADDED : மே 05, 2024 04:35 AM
கடலுார், : தேவனாம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் விஜி, 30; சுந்தராஜ் என்கிற சுந்தர் 42; மீனவர்கள். இருவருக்கும் மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் இரவு விஜி, தம்பி வினோத், நண்பர் தினேஷ்குமார் மூவரும், தேவனாம்பட்டினம் மகத்துபட்டறை அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தராஜ், தேவனாம்பட்டினம் கலைச்செல்வன் என்கிற கபில் 20; சாய்கணேஷ் என்கிற சாய் 19; ஆனந்த், வாசன், புதுப்பாளையம் சாகிப் உசேன், வன்னியர்பாளையம் முருகேஷ் ஆகியோர் விஜியிடம் தகராறு செய்தனர். இதனால், இரு கோஷ்டிகளாக மாறி தாக்கிக் கொண்டதால் நள்ளிரவில் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்த மோதலில் படுகாயம் அடைந்த விஜி, வினோத், தினேஷ்குமார் ஆகிய 4 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சுந்தர், கபில் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 45 பேரை தேடி வருகின்றனர்.