உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர்நடேசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு ரவீந்திரன், மாவட்ட பொருளாளர்கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ராசையன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆளவந்தார் துவக்கவுரையாற்றினார். இதில், மாத உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஜீவா, ராமகிருஷ்ணன், சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ