UPDATED : மார் 22, 2024 12:41 PM | ADDED : மார் 22, 2024 12:41 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தனியார் ரைஸ்மில் சுவரில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் முறையாக மூடாதது பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்களை அந்தந்த பகுதி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் அழிப்பது வழக்கம்.அதன்படி, கடலுார் லோக்சபா தொகுதி, விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அருகே தனியார் ரைஸ்மில் சுவரில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் நிழல்வலையால் மூடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கணக்குப்படி, சுவர் விளம்பரங்களை மறைச்சிட்டாங்க., ஆனால், விளம்பரங்கள் முன்பை விட தெளிவாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சுவர் விளம்பரத்தை அரசு உத்தரவுபடி மூடிட்டோம், அது வெளியே தெரிஞ்சா நாங்கள் ஒன்னும் செய்ய முடியாது என்ற கதையாக உள்ளது.