| ADDED : மே 10, 2024 01:09 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், இன்று உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடக்கிறது.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் 'கல்லுாரிக்கனவு 2024' மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தேர்வு செய்வது குறித்து வழிகாட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், இன்று காலை 9:00மணி முதல் மாலை 3:30 மணி வரை உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடக்கிறது.இதில், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பல்வேறு வகையான பாடப்பிரிவுகள், வேலை வாய்ப்பு சார்ந்த விபரங்கள் அடங்கிய அரங்கங்கள், கல்வி சார்ந்த தகவல்கள் வழங்கும் நிறுவனங்களின் அரங்கங்கள் இடம் பெறுகின்றன. மேலும், வங்கிகளின் கல்விக்கடன், போட்டித் தேர்வுகள் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம்.மேலும், மாவட்டத்தில் உள்ள சாதனையாளர்கள் தாங்கள் கடந்து வந்த வெற்றிப்பாதை விவரித்தல், கல்வி நிறுவன அரங்குகளின் மூலம் மாணவர்களுக்கு தங்களது கல்லுாரியில் உள்ள பாடப்பிரிவுகள், அவற்றுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகைகள், கல்லுாரி கட்டண விபரம், விடுதி வசதி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விபரமாக தெரிந்து கொள்ள முடியும்.இதுபோல், கடலுார் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடக்கிறது.