உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

கடலுார், : விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, அதே பகுதியைச் சேர்ந்த பெரிய நாயகராஜ் மகன் விமல்ராஜ், 23; என்பவரின் வீட்டின் அருகில் உள்ள கீற்று கொட்டகையில் சோதனை நடத்தினர்.அப்போது, 1,050 கிலோ அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து விமல்ராஜியிடம் விசாரணை நடத்தினர். அதில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பன்றி மற்றும் மாட்டுப் பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, விமல்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை