உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி அடித்து கொலை 7 மாதத்திற்கு பின் கணவர் கைது

மனைவி அடித்து கொலை 7 மாதத்திற்கு பின் கணவர் கைது

புவனகிரி: புவனகிரி அருகே மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில், ஏழு மாதங்களுக்கு பிறகு கணவரை கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் மோகன் மகன் மாமலைவாசன், 27; ஜே.சி.பி., டிரைவர். இவர், கடந்த ஓராண்டிற்கு முன்பு, திட்டக்குடி அருகே தாழைநல்லுாரை சேர்ந்த ராஜவேல் மகள் அபிநயா,18; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமான 5 மாதம் ஆகிய நிலையில், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இரவு அபிநயா திடீரென ரத்த வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி கிடந்தார். மறுநாள் காலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக்குழுவினர் சோதித்ததில் அபிநயா இறந்துவிட்டது தெரியவந்தது.இதுகுறித்து அபிநயா தந்தை ராஜவேல், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மருதுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் அபிநயா அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் சந்தேக மரணம் வழக்கை ,கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த மாமலைவாசனை தேடிவந்தனர். ஏழு மாதங்களுக்கு பிறகு நேற்று சொந்த ஊருக்கு வந்ததை அறிந்த போலீசார் மாமலைவாசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை