உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கடலுார்: குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியில் சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் முதுநகர் லைன் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், 40; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிச்சம்மாள் பிரியா 37; திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்து வெளியில் சென்றார். மணிகண்டன் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து மனைவி பிச்சம்மாள் பிரியா கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !