| ADDED : ஜூலை 20, 2024 05:08 AM
புவனகிரி: கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மக்களுடன் முதல்வர் ஊரகம் சிறப்பு திட்ட முகாமை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சிதம்பரம் தாசில்தார் ேஹமா ஆனந்தி வரவேற்றார். பீ.டி.ஓ.,க்கள் மோகன்ராஜ், ஆனந்தன், தலைமை நில அளவையர் சந்திரகாசன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சப் கலெக்டர் ரேஷ்மிராணி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.முகாமில் கீரப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த சி.மேலவன்னியூர், கீரப்பாளையம், ஆயிப்பேட்டை, வீரசோழகன், வடஹரிராஜபுரம், சாக்காங்குடி, எண்ணநகரம், கண்ணங்குடி மற்றும் கீழ்நத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.முகாமில் சுகாதாரத்துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தினர். பொதுமக்களிடம் சப் கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். துணை பீ.டி.ஓ., ரமேஷ் நன்றி கூறினார்.