உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,விற்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

வி.ஏ.ஓ.,விற்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

கடலுார்: வி.ஏ.ஓ.,விற்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதவு செய்துள்ளனர்.கடலுார் அடுத்த குடிகாடு வி.ஏ.ஓ., வாக இருப்பவர் சதீஷ்வரன், 48; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் அருகில் ஆய்வு பணியில்ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சேகர், 56; ராதாகிருஷ்ணன் மகன் சக்திமுருகன், 22; ஆகியோர், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வி.ஏ.ஓ., சதீஷ்வரனை திட்டி தாக்க முயன்றதுடன், பணியை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில், சேகர், சக்திமுருகன் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை