உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தில் கபடி போட்டி

இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தில் கபடி போட்டி

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், டாக்டர் இ.கே.சுரேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான முதலாமாண்டு கபடி போட்டி நடந்தது.போட்டியை, கல்விக்குழும தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். கல்லுாரி முதன்மை நிர்வாக அலுவலர் அருண்குமார், புல முதன்மையர் கவி பாண்டியன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனிவேல், துணை முதல்வர் ஜேசுதாஸ், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ், அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் ஞானசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், வேப்பூர் அரசு பெண்கள் கலை கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் குலோத்துங்கன், திருவாரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் அழகேசன், நெமிலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் சுப்ரமணியன், சின்னகண்டியங்குப்பம் முன்னாள் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.இந்த போட்டியில், மொத்தம் 35 அணிகள் பங்கேற்றன. அதில், முதல் பரிசு மூர்த்தி பிரதர்ஸ் அணி, இரண்டாம் பரிசு வழிசோதனைபாளையம் அணி, மூன்றாம் பரிசு டாக்டர் இ.கே.சுரேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நான்காம் பரிசு காட்டுக்கூடலுார் அணி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை