உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரைவர் வேலை பார்த்த ஊராட்சி செயலருக்கு கல்தா

டிரைவர் வேலை பார்த்த ஊராட்சி செயலருக்கு கல்தா

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியின் நிர்வாக பணிக்கு, அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டது. இதற்கு, தினக்கூலி அடிப்படையில் டிரைவர் நியமிப்பதாக கூறி, புவனகிரி அருகே உள்ள ஒரு கிராம ஊராட்சி செயலரை, தனது ஜீப் டிரைவராக பயன்படுத்தினார். அவரும் இரவு, பகலாக பணியாற்றியதுடன் வெளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த அதிகாரியின் சொந்த வேலைக்கும் ஜீப்பை ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் ஆய்விற்கு வந்தபோது, ஊராட்சி செயலர் ஒரு மாதமாக பணிக்கு வராமல், டிரைவர் வேலை பார்க்கும் விபரம் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆய்வு செய்த அதிகாரி, ஊராட்சி செயலரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இரவு, பகலாக டிரைவர் வேலை பார்த்து பாதிக்கப்பட்ட ஊராட்சி செயலர் மன உளச்சல் அடைந்துள்ள நிலையில், அதுபற்றி, சம்மந்தப்பட்ட அதிகாரி ஒன்றும் தெரியாததுபோல் 'ஹாயாக' தனது வேலையை பார்த்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி