உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காஞ்சிபுரம் வாலிபர் கடலுாரில் தற்கொலை

காஞ்சிபுரம் வாலிபர் கடலுாரில் தற்கொலை

கடலுார்: குடும்ப பிரச்னையால் காஞ்சிபுரம் வாலிபர், கடலுாரில் துாக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.காஞ்சிபுரம் கஞ்சபேஸ்வரர் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் ரூமாகேஷ்,29; சென்னை பேரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இவருக்கு சென்னையை சேர்ந்த கவிதா,26; என்பவருடன் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது முதல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி ரூமாகேஷ் மாயமானார். அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் கடலுார் முதுநகர் சோனாங்குப்பம் கடற்கரை பகுதி சவுக்குத் தோப்பில் வாலிபர் ஒருவர் துாக்கில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கடலுார் துறைமுகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர் விசாரணையில் இறந்தவர், காஞ்சிபுரத்தில் காணாமல் போன ரூமாகேஷ் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி