உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிக் பாக்சிங் போட்டி கடலுார் மாணவர்கள் சாதனை

கிக் பாக்சிங் போட்டி கடலுார் மாணவர்கள் சாதனை

பரங்கிப்பேட்டை : இந்திய அளவில் நடந்த கிக் பாக்சிங் போட்டியில், கடலுார் மாணவர்கள் 3 பேர் சாதனை படைத்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சத்திரபதி சிவாஜி இண்டோர் ஸ்டேடியத்தில், ஜூனியருக்கான, இந்திய அளவில் கிக் பாக்சிங் போட்டி நடத்தப்பட்டது. லைட் காண்டாக்ட், பாயிண்ட் பைட், லோகிக் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் மாணவர்கள் ரெங்கநாதன் தலைமையில், தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் அணி வீரர்கள் பங்கேற்றனர்.லைட் காண்டக்ட் மற்றும் பாயின்ட் பைட் பிரிவில் மாணவர் கிரித்திஷ் முதலிடம் பிடித்தார். லைட் காண்டெக்ட் பிரிவில் முகுந்தன் இரண்டாம் பரிசும், லோகிக் பிரிவில் மாணவி ஆதிரா சகானா மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சாதனை மாணவர்களை, தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்க தலைவர் சுரேஷ் பாபு, கடலூர் மாவட்ட வீரு கிக ்பாக்சிங் சங்க தலைவர் ரங்கநாதன், செயலாளர் சத்யராஜ், பயிற்சியாளர் சுபாஷ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி