உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோ.சத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கோ.சத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.இப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. மாணவி சுவேதா 480 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 18 பேர், 400க்கு மேல் 51 பேர், கணக்கு பாடத்தில் 10 பேர் 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். அம்பலவாணன்பேட்டை அரசு பள்ளி, 97 சதவீதம், தேர்ச்சி பெற்றது. வரலாறு பாடத்தில் பள்ளி மாணவி சாருலதா 100க்கு, 100 மதிப்பெண் பெற்றார். தேர்வு எழுதிய 32 மாணவர்களில், 10 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, 80 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ