உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கும்பாபிேஷக விழா 

கும்பாபிேஷக விழா 

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கும்பாபிேஷகதத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி