உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு; போலீசார் தீவிர விசாரணை

லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு; போலீசார் தீவிர விசாரணை

சிதம்பரம் : சிதம்பரம் லாட்ஜில் தங்கியிருந்தவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடியை சேர்ந்தவர் ஆனந்த்,55; இவர், கடந்த 6 மாதமாக, சிதம்பரம் வி.ஜி.பி., தெருவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.தினமும் காலை 6:00 மணிக்கு நடைபயிற்சி செல்லும், அவர் நேற்று காலை வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாத்ரூமில் ஆனந்த் ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார்.உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்த் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ