உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

புவனகிரி: புவனகிரியில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி டீ கடையில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த புவனகிரி பூதவராயன்பேட்டை மோகன்,61; சொக்கன்கொல்லை முருகானந்தம், 48; சிதம்பரம் பூதகேணி அன்வர்தீன், 62; ஆகியோரை கைது செய்தனர்.புவனகிரி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, வெளிமாநில லாட்டரி மற்றும் ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை