உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு  விற்றவர் கைது

லாட்டரி சீட்டு  விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, மேற்கு கோபுர வீதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரிந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் மோகன், 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி