உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆலோசனை கூட்டம்

மா.கம்யூ., ஆலோசனை கூட்டம்

கடலுார் : கடலுார் மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட செயலாளர்கள் கூட்டம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் சிறப்புரையாற்றினர். இதில், இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வரும் 3ம் தேதி கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, நகர செயலாளர்கள் அமர்நாத், உத்திராபதி, பாலமுருகன், பழனிவேல், ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை