உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., கூட்டம்

மா.கம்யூ., கூட்டம்

கடலுார் : கடலுார் நவநீத நகர் மா.கம்யூ., கட்சியின் கிளை கூட்டம் நடந்தது.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநகரகுழு உறுப்பினர் கருணாகரன், கிளைச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இதில், நவநீத நகரில் நத்தம் புறம்போக்கு இடத்தில் 90 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 50 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.நவநீதநகரில் மாநகராட்சி குழாயில் குடிநீர் செம்மண் கலரில் சாக்கடை நீர் கலந்து குடிக்க முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் குழாய்களை முழுமையாக அப்புறப்படுத்தி புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிர்வாகிகள் சிவசங்கரன், பிரபு, அய்யப்பன், ஆனந்த், அண்ணாமலைஉட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை