உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்தாலம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்

முத்தாலம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்

கடலுார்: சித்திரா பவுர்ணமியையொட்டி பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது.அதனையொட்டி, பச்சையாங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனாக பால்குடம் சுமந்து ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் முத்தாலம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை