உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இயற்கை உரம் விற்பனை துவக்கி வைப்பு

இயற்கை உரம் விற்பனை துவக்கி வைப்பு

திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சியில் காய்கறி கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 'செழிப்பு' இயற்கை உரம் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.விவசாயத்தில் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், இயற்கை உர பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதில் உள்ளாட்சி நிர்வாகங்களும் தங்களை இணைத்துக் கொள்ள, அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி திட்டக்குடி நகராட்சியில் சேகரிக்கப்படுகிற காய்கறி கழிவுகளில், மண்வளத்தை மேம்படுத்தும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து ஆகிய நுண்ணுாட்டங்களை சேர்த்து இயற்கை உரமாக மாற்றப்பட்டு, அதை செழிப்பு இயற்கை உரம் என மக்களுக்கு விற்பனைக்கு வழங்கும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.நகராட்சி பொறியாளர் ராமன், ஒரு கிலோ இயற்கை உரம், 10 ரூபாய் என விற்பனையை துவக்கி வைத்தார். நகராட்சி பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நகராட்சிஅலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் தினசரி விற்பனை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ