| ADDED : ஆக 03, 2024 04:42 AM
நெல்லிக்குப்பம் : மூன்று பேரை கொலை செய்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த காராமணிக்குப்பம், ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுகந்தகுமார், தாய் கமலீஸ்வரி, மகன் இசாந்த் ஆகியோர் கடந்த ஜூன் 15ம் தேதி கொலை செய்து எரிக்கப்பட்டிருந்தனர்.இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அதேபகுதியை சேர்ந்த சங்கர் ஆனந்த்,21; மற்றும் அவரது நண்பரான நெல்லிக்குப்பம் சாகுல்அமீது,20; ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, இருவரையும் விசாரிக்க அனுமதி கோரி நெல்லிக்குப்பம் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வனஜா, இருவரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க ் அனுமதி வழங்கினார்.அதனையொட்டி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் அமீது ஆகியோரை நேற்று ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையிலான குழுவினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.