உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சின்னவடவாடியில் புதிய டிரான்ஸ்பார்மர்

சின்னவடவாடியில் புதிய டிரான்ஸ்பார்மர்

விருத்தாசலம்: சின்னவடவாடியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி இருளர் குடியிருப்பு பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு, கோ.பூவனுார் துணை மின் நிலையத்தில் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மிகுந்த சிரமம் அடைந்தனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி, ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.இதனை, செயற்பொறியளர் சுகன்யா இயக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ