உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 

கடலுார்: கட்டணம் இல்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டுமென, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மனு அளித்துள்ளது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஈமச் சடங்கு செலவு நிதியாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும். கட்டணம் இல்லா மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை