உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதை முன்னிட்டு, வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சுத்தம் செய்து பராமரிக்கவும், பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள 2,221 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததால், மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பின்,மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அருண்தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மாணவியருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவியருக்கு அரசு பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வழங்கினர்.அப்போது, சி.இ.ஓ., பழனி, பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவியருக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை