உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு, தனியார் பஸ்களுக்கு அபராதம்

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து விதிமுறை மீறி சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்தனர்.கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், பண்ருட்டி மார்க்கத்திற்கு செல்லும் பஸ்கள் நின்று செல்ல 50 லட்சம் மதிப்பில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.ஆனால், பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்குள் செல்லாமல், சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பஸ் நிறுத்தத்திற்குள் நிற்காமல் சாலையோரத்தில் நின்ற இரண்டு புதுச்சேரி அரசு பஸ், ஒரு தமிழக அரசு பஸ் மற்றும் ஏழு தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், பஸ் நிறுத்தத்தில் மட்டுமே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என, அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ