| ADDED : மே 28, 2024 06:28 AM
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் வெப்பம் தனிந்திருந்த நிலையில், நேற்று திடீரென 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்ததால் மக்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்தது. 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் அவயதிடைந்தனர். இதனிடையே, அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கி நேற்றுடன் (27ம் தேதி) முடிவடைந்தது. அக்னி வெயில் நாட்களில் கடுமையான சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். காற்று திசை மாறுபாட்டின் காரணமாக மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் தனிந்து இதமான சூழல் காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு காலை முதல் கடுமையான வெயில் தாக்கம் காணப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு பின்னர் வெயில் சதம் அடிக்க துவங்கியுள்ளது. நேற்று கடலுாரில் 101 டிகிரிீ, திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம், வடலுார், பண்ருட்டி 103 டிகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் 101 டிகிரி வெப்பம் பதிவாகியது. கடலோர பகுதிகளில் கடல் காற்று வீசியது. மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.