மேலும் செய்திகள்
வலம்புரி நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
24-Aug-2024
பண்ருட்டி: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனுவாசபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 21ம் தேதி துவங்கியது. 22ம் தேதி 2ம் கால பூர்ணாகுதியும், மூலவர் திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, விஸ்வரூபம், காலசந்தி ஆராதனம், அக்னி ஆராதனமும், 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைக்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.மாலை 6:00 மணிக்கு உற்சவர் மூர்த்தி சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் அசோக்குமார், செயலாளர் ராஜாராம், பொருளாளர் ரவி, பத்மசாலியர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
24-Aug-2024