உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் திருட்டை தடுக்க குழி பறிப்பு

மணல் திருட்டை தடுக்க குழி பறிப்பு

பெண்ணாடம் வெள்ளாற்றில், அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வழியில், போலீசார் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தினர்.பெண்ணாடம், சிலுப்பனுார் சாலை பகுதி வெள்ளாற்றில் மாட்டுவண்டிகள் மற்றும் மொபட்டுகள், பொக்லைன் மூலம் டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவதால் நீர்மட்டம் சரிவு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் போலீசில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார், சிலுப்பனுார் சாலை பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிகளில், 2 இடங்களில் 3 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, தடை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை